ஸ்டாலின் வருகையொட்டி அந்தியூரில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

அந்தியூர், பிப். 21:  ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு நாளை (22ம் தேதி) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தொகுதி மக்களின் பிரச்னைகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டு அறிந்து, பிரசாரம் செய்ய உள்ளார். அவரது வருகைக்காக அந்தியூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அவை தலைவர் காளிமுத்து, நகர பொறுப்பாளர் காளிதாஸ், துணைத்தலைவர் சாக்கு பழனிச்சாமி முன்னிலையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வருகையின்போது, அதிக அளவில் கட்சித் தொண்டர்களுடன் கலந்துகொள்வது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க உறுப்பினர்கள் பாடுபட வேண்டும், ஸ்டாலின் தான் வருவாறு, விடியலை தரப்போறாரு என்பதனை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினர். இதில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், அத்தாணி பேரூர் கழக செயலாளர் செந்தில் கணேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் செபஸ்தியான், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சுப்பிரமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தியலிங்கம், அத்தாணி நகர இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஊராட்சி செயலாளர் நாகராஜ்,முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துநாதன், சித்த மலை  மற்றும் ஒன்றிய, நகர, கிளை தி.மு.க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: