×

வேதங்களில் வராக அவதாரம்

வராக புராணம் என்பது மகாபுராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும். இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும். இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள் ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன. வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

வராக அவதாரத்தை பொருத்தவரை முதல் குறிப்பு வேதத்தில் சதபத பிராமணத்தில் இருக்கிறது. நிலவுலகில் வலிமைமிக்க பன்றி ஒன்று எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து வெளிவந்ததாகவும் அந்தப் பன்றியும் படைப்பு கடவுளான பிரஜாபதியும் ஒருவரே என்றும் சதபத பிராமணம் கூறுகின்றது. நாராயண வல்லியில் வராக அவதாரம் மிக அருமையான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது.அதில் பூமிப் பிராட்டியை மீ ட்டவுடன் வராகன் ஆனந்த சொரூபமாக இருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகவத் சாஸ்திரத்தில் ஸ்ரீவராக பெருமானின் உருவம் விளக்கப்படுகிறது. ‘‘விஷ்னோர் மகா வராகஸ்ய நிர்மாண மது நோச்யதே” என்கிற மந்திரத்தில் கழுத்து வரை மனித உருவாகவும் மேலே திருமுகமண்டலம் வராக முகமாகவும் இடது முழங்கையில் பூமிப் பிராட்டியை ஏந்திக்கொண்டும் வலது திருக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டும் திருமுகமண்டலம் திரும்பி தேவியின் திருமேனித் தடங்களை முகரும் படியாகவும் திருவாழ் மார்பன் ஆகவும் திவ்ய ஆபரண பூஷிதனாகவும் கர்ப்பக்கிரகத்தில் வராக பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.இப்படித்தான் ஸ்ரீமுஷ்ணத்தில் வராகர் காட்சியளிக்கிறார்.

விஷ்ணு புராணம் வராக அவதாரத்தின் தோற்றத்தை மிக விரிவாகக் கூறுகின்றது.விஷ்ணு புராணத்தில் இரண்யாட்சனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை ஆனால் கடலில் பூமி மூழ்கிய விஷயமும் பகவான் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய விஷயமும், அப்பொழுது பூமி பிராட்டி செய்த ஸ்தோத்திரம் மற்ற தேவதைகள் கூறிய ஸ்துதிகள் கூறப்பட்டுள்ளன. விஷ்ணு புராணத்தில் ஸ்ரீவராக அவதார வைபவம்.

“தஸ்ய யஜ்ஞ வரஹஸ்ய விஷ்ணோ அமிததேஜச
பிரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம:”

– என்று குறிப்பிடப்படுகிறது அவர் சப்த சமுத்திரத்திலும் நிற்கும் பொழுது அவருடைய முழங்கால் அளவுக்கு கூட சமுத்திரம் இருக்கவில்லை என்று புராணங்கள் கூறுகின்றன. சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது (வராகர் பூமியை தூக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வியர்வை ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது)தன்னுடைய 100 கைகளால் ஒரு பன்றி

இப்பூவுலகை மேலேதூக்கி வந்தது என்று தைத்ரீய ஆரண்யகம்குறிப்பிடுகிறது. மகாபாரதத்திலும் மார்க்கண்டேய புராணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக பூவராகர் பெருமை பேசப்படுகிறது.பிரம்மாண்ட புராணத்தில் ஐந்தாம் அத்தியாயம் வராக பெருமானின் பேருருவை வருணிக்கிறது.

கிருஷ்ணா

Tags : Daraga ,Thirumal ,
× RELATED மரம், செடி, கொடியும் நானே…!