×

போடி அருகே முழு கொள்ளளவை எட்டியது மீனாட்சி அம்மன் கண்மாய் விவசாயிகள் மகிழ்ச்சி

போடி, பிப். 21: போடி அருகே, மீனாட்சி அம்மன் கண்மாய் முழுக்கொள்ளவை எட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போடி அருகே, அம்மாபட்டி ஊராட்சியில் 150 ஏக்கரில் மீனாட்சி அம்மன் கண்மாய் உள்ளது. மீனாட்சிபுரம் பேரூராட்சி எல்லைக்குள் வரும் இக்கண்மாய் கடந்தாண்டு ரூ.89 லட்சத்தில் குடிமராமத்து பணி நடந்தது. ஆனால், பணிகள் அரைகுறையாக நடந்ததாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த மழையால, கொட்டகுடி ஆற்றில் பெருக்கெடுத்தது. ஆனால், இக்கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை. கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி, விவசாயிகள் போடி தாசில்தார் மணிமாறனிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றில் இரண்டாவது முறையாக வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது போடி-தேனி சாலையில் சாலைகாளியம்மன் கோயில் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றுகால்வாயில் ஷட்டரை தாசில்தார் மணிமாறன் திறந்து வைத்தார். இதனால், மீனாட்சி அம்மன் கண்மாய் கண்மாய் முழு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கண்மாய் மூலம் 6000 ஏக்கர் அளவில் ஒரு போகம் நெல் சாகுபடி, தென்னை, சோளம், காய்கறிகள், மக்காச்சோளம் என பல்வேறு சாகுபடி நடக்கிறது. தற்போது ஒரு போகத்திற்கான அறுவடை பணியும் நெருங்கும் நிலையில் உள்ளது. மீனாட்சி அம்மன் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Meenakshi Amman Kanmai ,Bodi ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது