×

எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மறைமலை நகரில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். 11 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

பரப்புரையில் முதல்வர் பேசியதாவது:
காஞ்சி மண்ணுக்கு வாக்கு கேட்டு மறைமலை நகருக்கு வந்துள்ளேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணா பிறந்த ஒருங்கிணைந்த காஞ்சி மண்ணுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் தொழிற்சாலைகள், எங்கு பார்த்தாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள். திமுக உருவாக்கிய தொழிற்சாலையின் கோட்டைக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். டெல்லியின் ஆணவத்துக்கு அடிபணியக் கூடாது என்பதற்காக கடுமையான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பாதி தமிழ்நாட்டை சுற்றி வந்து 3ம் கட்ட பரப்புரை பயணத்தை நிறைவு செய்து நாளை 4ம் கட்ட பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளேன். டெல்லியின் ஆணவத்துக்கு அடிபணியக் கூடாது என்பதற்காக கடுமையான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள். கூட்டணிக் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களுக்கு கூட்டணி தலைவராக பெரிய சல்யூட். திராவிட மாடல் ஆட்சியில் தலைநிமிர்ந்த தமிழ்நாடு, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய உயரங்களை அடையும். தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்வதற்கு துணையாக இருந்தவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

திமுகவின் வளர்ச்சி திட்டங்களை அறிய தலைநகர் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றி வந்தால் போதும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை ஒரு மினி டூர் போல் சுற்றி வந்தால் பல திட்டங்களை பார்க்கலாம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உருவானது திமுக ஆட்சியில்தான். செய்யூர், ஆலந்தூரில் அரசுக் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் கலைஞ நநூற்றாண்டு பேருந்து முளையம் அமைக்கப்பட்டுள்ளது.  ஒ.எம்.ஆர்., ஈ.சி.ஆர் இடையே புதிய குடிநீர் தேக்கத்துக்கு  அடிக்கல் நாட்டியிருக்கிறோம்.

அவதூறுகளை பேசிக் கொண்டிருந்த பழனிசாமி, தற்போது என் மரணத்தையும் விரும்பி பேசத் தொடங்கிவிட்டார். 1.31 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை தந்த நான் இல்லாமல் போக வேண்டும் என்று எடப்பாடி பேசுகிறார். மகளிர் விடியல் பயணத்துக்கு முதல் கையெழுத்திட்ட எனது கை, மண்ணுக்குள் போக வேண்டும் என எடப்பாடி பேசுகிறார். நான் கொண்டு வந்த திட்டங்களை மண்ணுக்குள் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் வராது. திமுக திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் தான் ஆளுவார். என்னை மண்ணுக்குள் புதைத்தாலும் எனது திட்டங்களை புதைக்க முடியாது. அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு வரலாறு தெரியாது.

பேசுவதை எல்லாம் பேசிவிட்டு நான் அப்படி பேசவில்லை என்று எடப்பாடி இன்னொரு பொய்யை சொல்லியுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் களத்தில் இருப்பது திமுக மட்டுமே. இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு ஹெல்ப் லைன் அறிவித்து செயல்பட்டது திமுகதான். ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது திமுக. கொரோனா காலத்தில் திமுக களத்தில் பணியாற்றாமல் இருந்திருந்தால் மக்கள் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பார்கள்.  கொரோனா காலத்தில் 76 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கினோம். மக்களுக்கு உதவ கொரோனா காலத்தில் அரசுக்கு இணையான அரசை நடத்தியது திமுக தான்.

கொள்கை பற்று கொண்ட தொண்டர்களுக்கு தலைவனாக இருக்கும் நான் கொரோனாவை கண்டு பயப்படுவேனா.? எல்லா துறை அமைச்சர்களும் மருத்துவத் துறை அமைச்சர்களாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டேன். பதவி ஏற்று முதலில் நான் சென்றயிடம் நந்தம்பாக்கம் கோரோனா சிகிச்சை மையம் தான். தமிழ்நாட்டில் சென்னை உள்பட எந்த மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக உதவியது திமுகதான். வாழ்க்கை முழுக்க களத்தில் இருப்பவன்தான் மு.க.ஸ்டாலின். என கூறினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Chengalpattu ,Dimuka ,Coalition ,Tamil ,Kathimalai ,Kanji ,
× RELATED எனது இறுதி மூச்சு இருக்கும் வரை...