ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சலும்பர் மாவட்டம் லசாடியா பகுதியில் சில குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 2 கிராமங்களில் கடந்த 1 முதல் 5ம் தேதி வரை 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட 5 குழந்தைகள் பலியாகினர். மர்ம காய்ச்சல் தாக்கி பலியானதாக தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து குழந்தைகள் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே பல்வேறு நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை ெதாடர்ந்து முதல்வர் பஜன்லால் சர்மாவும், நிலைமையை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். குழந்தைகள் இறப்புக்கான காரணம் அறியவும். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
