×

கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் பழனிசாமி: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

 

சென்னை: திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி கீழ்த்தரமாக பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றவர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கேட்டறிந்தவர். தனது உயிரை துச்சமென மதித்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் மகன்தான் ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் அல்ல.

திமுக ஆட்சியில்தான் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. பரப்புரையில் எப்படி பேசவேண்டும் என்ற இலக்கணத்தை மீறி பழனிசாமி பேசி வருகிறார். கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் எடப்பாடி கே.பழனிசாமி

இத்தனை மலிவான அரசியல் இதுவரை தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. எடப்பாடி போல் இவ்வளவு மலிவான அரசியலை தமிழ்நாட்டில் இதுவரை யாரும் செய்யவில்லை. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உண்மையை மூடி மறைத்தவர்தான் எடப்பாடி. கொலை வழக்கில் தேடப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியார் காப்பாற்றப்பட்டார். உயிரைப் போக்கும் மனப்பான்மை இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு போகவில்லை.

Tags : Palaniswami ,RS Bharathi ,Edappadi Palaniswami ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Edappadi ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்...