×

உபகரணம் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

அரியலூர், பிப்.19: அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான நடைபயிற்சி உபகரணங்கள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல், முடநீக்கு சாதனங்கள், நடை பயிற்சி உபகரணம், செயற்கை கை, கால் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உபகரணங்கள் தேவைப்படும் நபர்களை, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவின்குமார், இயன்முறை மருத்துவர் ராஜ்குமார், முட நீக்கியல் வல்லுநர் ராமன், சிறப்பாசிரியர் பாமாலெட்சுமி ஆகியோர் கண்டறிந்தனர். முகாமில் தொழில் கடனுதவி பெற 10 பேரும், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைபெற 150 பேர் விண்ணப்பம் அளித்தனர். முகாமில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், செயல்திறன் உதவியாளர் பிச்சாண்டி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில், 183 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் புதிய தேசிய அடையாள அட்டை 21 பேருக்கு வழங்கப்பட்டது.

Tags : camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு