×

அரியலூர் மாவட்டத்தில் ரூ.7.25 கோடியில் நல உதவி வழங்கல்

அரியலூர், பிப்.19: அரியலூரில் 1578 பேருக்கு ரூ.7.25 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரியலூரில் தனியார் திருமண மஹாலில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதல்வரின் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழா, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதலமைச்சரின் சிறப்பு வரன்முறை படுத்தும் திட்டத்தின்கீழ் இலவச வீட்டுனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், நலத்திட்ட உதவிகளை அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா தலைமையில் வழங்கினார். விழாவில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில் 1578 நபர்களுக்கு ரூ.7.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, ஆர்டிஓ ஏழுமலை, தாசில்தார் சந்திரசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாவித்ரி, ஒன்றியக்குழு தலைவா; செந்தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...