×

ஆண்டுதோறும் நிகழ்கிறது 15% உயிரிழப்புகள்; வானிலை மாற்றத்தால் உருவாகும் பேரிடர்களால் 3 கோடி பேர் பாதிப்பு: இயற்கை ஆய்வாளர்கள் கவலை

 

காலநிலை மாற்றத்தால் பூமியை பாதிக்கும் அழுத்தமான பிரச்னைகள் குறித்து, உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளிமண்டலத்தின் நிலையை குறிக்கிறது. இது வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம், மேகமூட்டம், மழைப்ெபாழிவு போன்ற பல்வேறு இயற்ைக சூழல்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவே ெபரும் இயற்கை ேபரிடர்களுக்கும் வழிவகுக்கிறது.
நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, வறட்சி, நிலச்சரிவு, பனிச்சரிவு, மின்னல் மற்றும் இடி தாக்குதல் போன்றவை இயற்ைக பேரிடர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நிகழும் இயற்கை பேரிடர் என்பது உலகளாவிய பெரும் அபாயமாக உருவெடுத்து வருகிறது என்பது ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல். இது குறித்து இயற்கை சார்ந்த மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இயற்கை பேரிடர்களுக்கு அடித்தளமாக இருப்பது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றம் என்பது ஒரு அழுத்தம் நிறைந்த உலகளாவிய பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது நமது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் அபாயமாக மாறி வருகிறது.

1980ம் ஆண்டிலிருந்து தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண் 40சதவீதம் அதிகரித்துள்ளது. ஆதிகாலத்தில் இருந்தே இயற்கை பேரிடர்கள் பூமியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஆனால் கடந்த 10ஆண்டுகளாக இதன் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் இயற்ைக பேரிடர்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இவை நிகழ்த்தும் காலநிலை மாற்றங்கள் தான், இயற்கை பேரிடர்களுக்கு சமீபஆண்டுகளாக வழிவகுத்து வருகிறது. மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்ைக ேபரழிவுகளால் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உயிரிழப்பு என்பது 15 சதவீதமாக உள்ளது. இயற்கை பேரிடர்கள் என்பது மனிதர்களின் உயிருக்கு மட்டும் உலை வைப்பதில்லை. பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கிறது.

கடந்த 20ஆண்டுகளில் உலகளவில் பேரிடர்கள் தொடர்பான பொருளாதார இழப்பின் மதிப்பு 3டிரில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் வெள்ளப்பேரழிவு, உத்ரகாண்ட் நிலச்சரிவு, பெருங்கடல்சுனாமி, குஜராத் பூகம்பம், ஒடிசா புயல் என்று கடந்த 10ஆண்டுகளில் நாம் கண்ணால் கண்ட இயற்கை பேரழிவுகள் ஏராளம். இதில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. இது மட்டுமின்றி கல்வி, முன்னேற்றம், நம்பிக்கை, தொழில், குடும்பம் என்று அனைத்தையும் இயற்கை ேபரிடர்கள் சிதைத்து விடுகிறது. எனவே இயற்கையை சீரழிப்பதை தடுக்க அரசுகளும், அதற்கு துணையாக ஒவ்வொரு மனிதரும் கை கோர்க்க வேண்டும். அபாயம் இல்லாத பூமியை நமது தலைமுறைக்கு மட்டுமின்றி, பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டு ேசர்க்கும் வகையில் நமது செயல்கள் இருக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

 

Tags : Earth ,
× RELATED சொத்து மேலாண்மை மதிப்பளவை...