×

சொத்து மேலாண்மை மதிப்பளவை மேம்படுத்தி முன்னணி நிறுவனமாகத் தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டது ஃபண்ட்ஸ் இந்தியா!

ஃபண்ட்ஸ் இந்தியா, (FundsIndia) தனது சொத்து மேலாண்மை மதிப்பளவை (AUM) ரூ. 25,000 கோடியாக மேம்படுத்தி, டிஜிட்டல் வெல்த் துறைப்பிரிவின் ஒரு முன்னணி நிறுவனமாகத் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக்கொண்டது.

பெங்களூரு, மார்ச் 26, 2026: ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனம், ஒரு காலாண்டுக்கும் சற்றே அதிகமான கால அளவில் தனது அஸ்ஸட்ஸ் அண்டர் மேனேஜ்மெண்ட் இன் கீழான நிதி (AUM) மதிப்பை 25% அதிகரித்து ரூ. 20,000 கோடியிலிருந்து ரூ. 25,000 கோடியாக உயர்த்தியதன் மூலம், ரூ. 25,000 கோடி இலக்கை எட்டி இந்த மைல்கல் சாதனையை படைத்துள்ளது. இந்தியாவின் வெல்த் மேனேஜ்மெண்ட் சூழமைவில் (Wealth Management Ecosystem) கட்டமைப்பு ரீதியாக நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கு மத்தியில், நிறுவனத்தின் இந்த வளர்ச்சியானது, இந்தச் சாதனைக்கும் அப்பால், ஒரு திருப்புமுனைக்கான காலகட்டத்தை வரையறுத்து உணர்த்துகிறது.

ஃபண்ட்ஸ்இந்தியாவின் இந்த தற்போதைய AUM ரூ. 25,000 கோடியானது ஆண்டுக்கு ஆண்டு 58% வளர்ச்சி விகிதத்தையும் மூன்று ஆண்டுகளில் வருடாந்திர வளர்ச்சி ஒட்டுமொத்தமாக 38% சதவிகித அளவையும் (CAGR) பிரதிபலிக்கிறது. இந்தத் தளம் கடந்த 12 மாதங்களில், ரூ. 2,100 கோடி நிகர உள்வரவைப் பதிவு செய்ததோடு, கடந்த 24 மாதங்களில் ஒட்டுமொத்த உள்வரவு ரூ. 2,900 கோடியை எட்டியுள்ளது. மொத்த சொத்து மதிப்பில் 77% சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பாகவும், 23% உயர் நிகர மதிப்பு (HNI) மற்றும் மிக உயர் நிகர மதிப்பு (UHNI) முதலீட்டாளர்களின் பங்களிப்பாகவும் அமைந்து ஒரு உகந்த சமநிலையான மற்றும் மீண்டெழும் திறனுடனான சொத்தின் அடித்தளத்தைப் பிரதிபலிக்கிறது.

நிறுவனத்தின் இந்த AUM வளர்ச்சியானது, தொடர்ந்த உறுதியான சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, நிறுவனத்தின் IFA கூட்டாளி சூழமைவில் வலிமையான ஈடுபாடுகள், மற்றும் வசதிபடைத்தோர் மற்றும் தனியார் சொத்துப் பிரிவினரிடையேயான ஈர்ப்பு விசையை விரைவடையச் செய்வது ஆகியவற்றின் மூலம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த விரிவாக்கமானது சந்தையின் குறுகிய கால உந்துதலை மட்டுமே பிரதிபலிக்கவில்லை; மாறாக, தொடர்ந்த நிலையான முதலீட்டு வரவுகள், முறையான ஒதுக்கீடுகள், மற்றும் முதலீட்டாளர் குழுவினரிடையே பல்வேறு வகைப்பட்ட பங்களிப்புகளால் வலுவாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட கால செல்வ உருவாக்கத்தை நோக்கி பல்வேறு துறைப்பிரிவுகள் முழுவதும் இந்திய முதலீட்டாளர்கள் கட்டுப்பாட்டுடன் கூடிய, இலக்கை நோக்கிய அணுகுமுறைகளைப் பின்பற்றுவதால், டிஜிட்டல் வழிமுறைகள், ஆலோசகரை மையமாகக் கொண்ட முதலீட்டு சிறப்புக் கூறுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இந்த வளர்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு முழுமையான டிஜிட்டல் விநியோகஸ்தராக மட்டுமே இருந்த நிலையிலிருந்து ஃபண்ட்ஸ்இந்தியா ஒரு முழுமையான செல்வ மேலாண்மைத் தளமாக உருமாறியிருப்பது, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளால் இயக்கப்படும் இந்த மாற்றத்தை துல்லியமாகப் பிரதிபலிக்கிறது .

இன்றைய நிலையில் இந்தத் தளம் பாரம்பரிய நகர்ப்புற செல்வ மேம்பாட்டு மையங்களைக்கடந்தும் விரிவடைந்து இந்தியா முழுவதும் ~30 லட்சம் பயனர்களுக்குச் சேவை வழங்கிவருகிறது இந்த முதலீட்டாளர்களில் சுமார் 39% T30 நகரங்களைச் சேர்ந்தவர்கள், அதே சமயம் 61% B30 சந்தைகளைச் சேர்ந்தவர்கள் என்பது. வளர்ந்து வரும் புவியியல் நிலப்பரப்புக்கள் முழுவதும் கட்டமைக்கப்பட்ட முதலீட்டு நடவடிக்கைகள் ஆழமாக ஊடுருவி மேம்பட்டுவருவதை எடுத்துக்காட்டுகிறது. இந்த வளர்ச்சியின் ஒரு முக்கிய தூணாக முறையான முதலீட்டு (SIP) நடைமுறைகள் இந்த வளர்ச்சிக்கான ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது. ஃபண்ட்ஸ்இந்தியாவின் SIP புக் ரூ. 142 கோடியாகவும், மாதாந்திர வருவாய் விகிதம் ரூ. 2 கோடியாகவும் இருப்பது, நீண்ட கால செல்வ உருவாக்கத்தில் முதலீட்டாளர்களின் தொடர்ந்த நிலையான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

நிதித் திட்டங்களின் கண்ணோட்டத்தில், PMS மற்றும் AIF திட்டங்கள், நிலையான வருமானம் மற்றும் நிதியாவணங்கள், மற்றும் பங்குகள் ஆகியவற்றின் துணையோடு, பரஸ்பர நிதிகள் (Mutual funds) மிகப்பெரிய பங்காற்றிவருகின்றன. இத்தகைய பல்வகை சார்ந்த ஒரு கலவையான திட்டங்கள், சில்லறை வணிகம் , வசதிமிக்க மற்றும் தனிப்பட்ட செல்வந்தர் வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவதற்கான ஒரு விரிவான வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனமாக இந்தத் தளம் பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

இந்த மைல்கல் சாதனை குறித்து தனது கருத்துக்களை கருத்துத் தெரிவித்த ஃபண்ட்ஸ் இந்தியா குழும, CEO அக்‌ஷய் சப்ரு, கூறினார்:
“நிறுவனத்தின் AUM மதிப்பு ரூ. 25,000 கோடியைக் கடந்த இந்த நிகழ்வு எங்கள் வளர்ச்சிப் பாதையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக திகழ்வதோடு முதலீட்டாளர்களும் கூட்டாளர்களும் எங்கள் மீது வைத்துள்ள ஆழ்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில், முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்குமுறையான சார்ந்த நீண்ட கால மற்றும் இலக்கு அடிப்படையிலான செல்வ உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் எங்களுக்குள்ள மன உறுதிப்பாட்டை இந்த வளர்ச்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
ஃபண்ட்ஸ்இந்தியாவில், தனித்துவமான பல்வேறு பிரிவுகளில் நாங்கள் செலுத்திவரும் கவனத்தில் எங்களின் ஆற்றல் அடங்கியுள்ளது. ரிஷப் கார்க் தலைமையிலான எங்களின் டிஜிட்டல் வணிகம், பரந்த அளவில் அறிவார்ந்த முதலீட்டிற்கான அணுகலை மக்கள் மையப்படுத்தப்படுவதை தொடர்ந்து சாத்தியமாக்கி வருகிறது. ஸ்ரீனிவாஸ் மெண்டு தலைமையில் இயங்கும் எங்களின் தனித்துவமான பிரைவேட் வெல்த் துறைபிரிவு , வளர்ந்து வரும் மற்றும் நன்கு நிலை பெற்ற செல்வந்த முதலீட்டாளர்களுக்கு அதிநவீன, தனிப்பட்ட மிக மேம்பட்ட வளமான செல்வத்திற்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், மனிஷ் காத்வி தலைமையிலான எங்களின் பார்ட்னர்ஸ் வணிகம், ஆயிரக்கணக்கான நிதி ஆலோசகர்களுக்கு ஆழமான ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் செயலாக்கத் திறன்களை வழங்கி அவர்களுக்கு அதிகாரம் வழங்கிவருகிறது.

”இந்த மூன்று துறைகளும் இணைந்து, பல்வேறு துறைப் பிரிவுகள் முழுவதுமுள்ள முதலீட்டாளர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் ஒரு அர்த்தமுள்ள மதிப்புக் கூட்டும் ஒரு சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த சூழமைப்பை உருவாக்குகின்றன. இந்தியா முழுவதும் வளமான நிதிநிலையை மேம்படுத்துவதற்கான எங்களின் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும்போது ஒரு, நிலையான, நீண்டகால விளைவுகளை ஏற்ப்படுத்துவதற்கான, நீடித்த திறன்கள், வலுவான நிர்வாகம், ஆழமான ஆராய்ச்சி மற்றும் அளவிடக்கூடிய தொழில்நுட்ப திறன்களை உருவாக்குவதே எங்களின் முன்னுரிமையாக உள்ளது.”

வெஸ்ட் பிரிட்ஜ் கேப்பிட்டால் நிறுவனத்தின் பின்புல ஆதரவுடன், ஃபண்ட்ஸ் இந்தியா தனது தொழில்நுட்பக் கட்டமைப்பு, தரவு உள்கட்டமைப்பு மற்றும் மையத் தளத் திறன்களை மேம்படுத்தி வலுப்படுத்தும் பொருட்டு கணிசமாக அளவில் முதலீடு செய்து வருகிறது.2025-26 நிதியாண்டில், இந்நிறுவனம் தனது ஆலோசனை வழங்கல் கட்டமைப்புகளைச் செம்மைப்படுத்தி, போர்ட்ஃபோலியோ நுண்ணறிவை மேம்படுத்தி, டிஜிட்டல் மற்றும் கூட்டாளிகளின் தலைமையிலான சேனல்கள் முழுவதும் தொடக்கத்திலிருந்து இறுதிவரையிலான ஒரு முழுமையான வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு சார்ந்த திறன் அமைப்புக்களில் மேற்கொள்ளப்படும் கூடுதல் இணை முதலீடுகள், ஆழமான தனிப்பயனாக்கத்தையும் அளவிடக்கூடிய ஆலோசனைத் திறனையும் வழங்கும்.

தற்போது 1150 தொழில் துறை நிபுணர்களை உள்ளடக்கிய ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனமானது, ஆலோசனை வழங்கல், தொழில்நுட்பம், தனிநபர் செல்வ மேலாண்மை மற்றும் இடர் மேலாண்மை ஆகிய துறைப்பிரிவுகளில் தனது இயக்கத் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதன் மூலம், இந்தியாவில் தொடர்ந்து பரிமாண வளர்ச்சி கண்டு வரும் செல்வ மேலாண்மைச் சூழமைப்பில் பொறுப்புணர்வுடன் கூடிய வளர்ச்சிக்கும் நீண்டகால மதிப்பு உருவாக்கத்திற்கும் தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டுள்ளது.

Tags : Funds India! ,Funds India ,FundsIndia ,Bangalore ,Funds India Company ,
× RELATED அடுப்பங்கரையில் இருந்து தொழில்...