கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து

வேப்பனஹள்ளி, பிப்.19:  வேப்பனஹள்ளி அருகே கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 30 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பண்ணையை சுற்றியுள்ள பகுதியில் காய்ந்து சருகாகி கிடந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்டு அங்கிருந்த ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தீ பரவுவது தடுக்கப்பட்டதால் பண்ணையிலிருந்த சுமார் முப்பதாயிரம் கோழிகள் உயிர் தப்பின.

Related Stories:

>