×

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்: 3 நாட்களில் 3,430 வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். மிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள், திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேட்சைகள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் தமிழகம் முழுவதும் 573 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2வது நாளில் துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் உட்பட சுமார் 800 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 3ம் நாளான நேற்று மட்டும் 600 பேருக்கு மேற்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்படி தமிழகத்தில் 3 நாட்களிடம் மட்டும் 3,430 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை ஆகும். மனு தாக்கல் செய்ய முடியாது. அடுத்து இறுதி நாளான நாளை ஒரு நாள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம். இறுதிநாளான திங்கட்கிழமை, இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளி கிழமை மாலை வெளியான நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து, 7ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு 9ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் சின்னம் ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில், வேட்பாளரின் புகைப்படம், சின்னம், பெயர் விவரங்களுடன் பேலட்ஷீட் தயாரிக்கப்பட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறும். 23ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இடைவிடாமல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags : Tamil Nadu ,Chennai ,Legislative Assembly ,Mizhaka Legislative Assembly ,
× RELATED காஞ்சிபுரம் முன்னாள் எம்பி...