- பழனிசாமி
- உதயநிதி ஸ்டாலின்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- விராலிமலை சட்டமன்றத் தொகுதி
- திமுகா
- வேட்பாளர்
- கே. கே. துணைத் தலைவர்
- உதயநிதி ஸ்டாலின்
- வீரலிமலை செக்போஸ்ட்
- செல்பந்தியன்
- வீரலிமலை சேதகுதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனை ஆதரித்து விராலிமலை செக்போஸ்ட் அருகே இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 234 தொகுதிகளின் வெற்றியில் விராலிமலை ெதாகுதி வெற்றி முக்கியமானது. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் யாரென்று உங்களுக்கு தெரியும். குட்கா புகழ் சொந்தக்காரர். நாடக கம்பெனி போல் செயல்படக்கூடியவர். அவரை நம்பாதீர்கள். தேர்தல் முடிந்தவுடன் குவாரி தொழிலுக்கு சென்றுவிடுவார். அவர் ஐடி, ஈடி வழக்குகளை சந்தித்து வருகிறார். இதேபோல் அதிமுகவை ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து பாஜ மிரட்டி கூட்டணி அமைத்துள்ளது.
திராவிட மாடல் அரசு விராலிமலை ெதாகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. விடியல் பேருந்து திட்டம், மகளிர் உரிமை தொகை, கல்வி உதவி ெதாகை, நான் முதல்வர் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மோடியின் அடிமையாக எடப்பாடி செயல்படுகிறார். ஜாடிக்கு ஏற்ற மூடி போல் மோடிக்கு எடப்பாடி உள்ளார். டெல்லி ரிமோட் மூலம் தமிழகத்தை இயக்கப்பார்க்கிறது. அதன் பியூசை பிடுங்க வேண்டும். தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
பத்து தோல்வி பழனிசாமினு சொல்வார்கள். இந்த தேர்தலில் தோற்கடித்து மொத்த தோல்வி பழனிசாமி என்று மாற்ற வேண்டும். சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்யும் தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார்.
