விருதுநகர், ஏப்.5: விருதுநகரில் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மூன்று விளம்பர பலகைகளை தேர்தல் மேற்பார்வையாளர் அதிரடியாக அகற்றினார். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறி மூன்று விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விருதுநகர் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் மேற்பார்வையாளர் நவ்நீத்குமார்க்கு புகார் வந்தது.
அதன் பேரில், தேர்தல் மேற்பார்வையாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட அந்த மூன்று விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டன. தேர்தல் மேற்பார்வையாளர் நவ்நீத்குமார் கூறுகையில், அரசியல் தொடர்பான விளம்பரப் பலகைகள் அல்லது பதாகைகளை உரிய அனுமதி பெறாமல் வைப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
