ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.5: ஸ்ரீவில்லிபுத்தூரில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேர்தல் அலுவலர் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பாலமுருகன், வட்டாட்சியர் வானதி, துணை வட்டாட்சியர் சசிகலா மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் என பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி நகர் வழியாக வந்து பின்னர் மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.
