×

குன்றத்தில் இதுவரை 17 பேர் வேட்பு மனு

திருப்பரங்குன்றம், ஏப். 5: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வசதியாக தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திமுக வேட்பாளர் எஸ்.கிருத்திகா தங்கபாண்டி திருநகர் தேர்தல் அலுவலர் ராஜகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதேபோல் அதிமுக சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா வேட்பு மனு தாக்கல் செய்தார்.தமிழக வெற்றி கழக வேட்பாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்களோடு சேர்த்து நேற்று வரை மொத்தம் 17 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரு சுயேட்சை மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர் உள்ளனர்.

 

 

Tags : Kundram ,Thiruparankundram ,DMK ,S. Krithika Thangapandi ,Thirunagar ,Election Officer ,Rajaguru ,AIADMK… ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்