×

மமக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி பரப்புரை

மணப்பாறை, ஏப்.5: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ப.அப்துல்சமதை ஆதரித்து நேற்று பரப்புரை மேற்கொண்ட எம்.பி கனிமொழி, பாஜக மிகப்பெரிய வாஷிங் மெஷின் அந்த வாஷிங் மிஷினில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்து விட்டார்.

மாற்றுக் கட்சியில் இருக்கும் போது கரைப்படைந்தவர்களாக இருப்பவர்கள் மீது இன்கம் டேக்ஸ், சிபிஐ, ஈடி ரைட் என வன்மம் வைக்கும் பாஜக அவர்களது கட்சியிலோ அல்லது அவர்களது கூட்டணி அவர்கள் சேர்ந்து விட்டால் அவர்களை அந்த வாஷிங் மெஷின் வைத்து அவர்களை தூய்மையானவர்களாக மாற்றி விடுகிறது. சொன்னதை செய்து காட்டிய திராவிட மாடலில் பல மக்கள் நலப் பணிகளை செய்து காட்டி மக்களிடம் மீண்டும் பணியாற்றிட திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்றார்.

 

Tags : Kanimozhi ,MMA ,Manapparai ,Secular Progressive Alliance ,Manithanaya Makkal Katchi ,P. Abdul Samad ,Manapparai, Trichy district ,Edappadi Palaniswami ,BJP ,
× RELATED திருவெறும்பூர் தொகுதியில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு