மணப்பாறை, ஏப். 2: மணப்பாறை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.82,550 பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை, சட்ட மன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்று மாலை ஈடுபட்டனர். அப்போது பிள்ளையார்-கோவில்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின் போது, வலையப்பட்டியை சேர்ந்த குணசேகரன் என்பவர் ரூ.82,550 உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட தொகையினை மேல்முறையீட்டு குழுவிடமிருந்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும் வரை பறிமுதல் தொகை அடங்கிய கட்டினை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு முதுநிலை வருவாய் ஆய்வாளர் உலகமணி மூலம் மணப்பாறை சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
