×

நீடாமங்கலம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

நீடாமங்கலம்,ஏப்.5: நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளி முப்பெரும் விழா நடந்தது. நீடாமங்கல் ஒன்றியம் மூவர்கோட்டை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனறனரி தேர்வில்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டு விழா, விளையாட்டு போட்டி பரிசளித்தல்விழா, இலக்கிய மன்றம் பரிசளித்தல் விழா ஆகிய முப்பெரும்விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இந்திரஜித் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். ஆசிரியர் எம்எல்டா மெர்லின் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி, வட்டார மேற்பார்வையாளர் சத்தியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆசிரியைகள் மீனா, வைஷாலி, மாலதி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலண்குழு மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியர் ஜார்ஜ் நன்றி கூறினார்.

 

 

Tags : Needamangalam Government School ,Needamangalam ,Srinidhi ,Needamangalam Union Muvarkottai Panchayat ,Onriya Middle School ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்