×

புதுக்கோட்டையில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.6 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை,ஏப்.5: தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் சார்பில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் நேற்று திருகோகர்ணம் பகுதியில் உள்ள அருங்காட்சியகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 200 இருந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. மேலும் இந்த பணம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Pudukkotta ,Pudukkottai ,Tamil Nadu ,Election Commission ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்