×

நெல்லை மாவட்ட 5 தொகுதிகளுக்கு மேற்கு வங்க ஏடிஜிபி தேர்தல் பார்வையாளராக நியமனம்

நெல்லை, ஏப்.5: நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஏடிஜிபி சுப்ரதிம் சர்கார் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஏடிஜிபி சுப்ரதிம் சர்கார் என்பவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : West Bengal ADGP ,Nellai district ,Nellai ,West Bengal ,ADGP ,Subratim Sarkar ,Ambai ,Palayankottai ,Nanguneri ,Radhapuram ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்