×

அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் காரில் பறக்கும்படை திடீர் சோதனை

உடன்குடி, ஏப்.5: உடன்குடியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன்குடி அருகேயுள்ள சிறுநாடார்குடியிருப்பு பகுதியில் கால்நடை, மீன்வளம், மீன்வர் நலத்துறை அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது குலசேகரன்பட்டினம் விலக்கு பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாலதி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பிரசாரத்திற்கு சென்ற அமைச்சரின் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். தொடர்ந்து காரில் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் காரை அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Election Flying Squad ,Udangudi ,DMK ,Tiruchendur ,Animal Husbandry, Fisheries and Fishermen Welfare Department ,Sirunadarkudiyiruppu ,Udangudi… ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்