×

தூத்துக்குடியில் நாய்களுக்கு விஷம் வைத்து சாகடிப்பு

தூத்துக்குடி, ஏப்.5: தூத்துக்குடி பாகம்பிரியாள் தெருவை சேர்ந்தவர் மிதுன் (41). தூத்துக்குடி மாவட்ட விலங்குகள் நல அமைப்பு உறுப்பினராக உள்ளார். இவர் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது 2 நாய்கள் இறந்த நிலையில் கிடந்தன. அந்த நாய்களை பார்த்த போது, யாரோ விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து மிதுன் வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,Mithun ,Bagambiriyal Street, Thoothukudi ,Thoothukudi District Animal Welfare Organization ,Krishnarajapuram ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்