×

போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி, ஏப்.5: கிருஷ்ணகிரி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். தற்போது சிறப்பு பணியாக, கிருஷ்ணகிரி குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2ம் தேதி இரவு, வீட்டுக்கு வந்த அவர், தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று முன்தினம் காலை, வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி பாரதி, அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார், அவரது உடலை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பற்றி வழக்குப் பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Vijayakumar ,Kamaraj Nagar ,Maharajakadai Police Station ,Crime Branch ,
× RELATED ஓசூரில் முள்ளங்கி விலை உயர்வு