- Thenkanikottai
- அஞ்செட்டி
- பறக்கும் அணி
- அஞ்செட்டி பெல்லாட்டி கிராமம்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- தேர்தல் பறக்கும் அணியில்
தேன்கனிக்கோட்டை, ஏப். 5: அஞ்செட்டி அருகே நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பெல்லட்டி கிராமம் அருகே, தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணகுமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது, மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வீடு கட்ட கடன் வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார். உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறி, பறிமுதல் செய்த பணத்தை தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலத்தில் தளி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் ஒப்படைத்தனர்.
