- மல்லசமுத்திரம்
- சிவகுமாரின்
- தும்பிபாடி
- சேலம் மாவட்டம்
- திருச்சி மாவட்டம்
- துதிபாளையம் சாலை
- கல்லுக்கடை
- மல்லசமுத்திரம்…
மல்லசமுத்திரம், ஏப்.5: சேலம் மாவட்டம், தும்பிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(44). இவர் திருச்சி மாவட்டத்தில் வைக்கோலை லாரியில் ஏற்றிக்கொண்டு, ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வருகிறார். நேற்று மதியம் 12.30 மணியளவில், மல்லசமுத்திரம் அடுத்த கள்ளுக்கடை அருகே துத்திபாளையம் சாலையில் செல்லும் போது, லாரியில் இருந்த வைக்கோல் மீது மின்வயர்கள் உரசி தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவி லாரி முற்றிலுமாக பற்றி எரிந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து ஆட்டையாம்பட்டி, திருச்செங்கோடு ஆகிய பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். ஆனால், லாரி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
