×

காஸ் தட்டுப்பாடு எதிரொலி மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்

ஊத்துக்கோட்டை, ஏப்.5: ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் சமையல் செய்வதற்கு காஸ் சிலிண்டர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு சிலர் மண்ணெண்ணெய் ஸ்டவ் மற்றும் மின்சார அடுப்பிற்கு மாறி வருகிறார்கள். இதில், ஏழை எளிய மக்கள் மண் அடுப்பிற்கு மாறியுள்ளனர். இதன் எதிரொலியாக, பெரியபாளையம் அருகே அகரம், தண்டலம், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் எதிரிலும், ஆந்திர மாநிலம், புதுகுப்பம் கிராமத்திலும் மண் அடுப்புகள் தயார் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு தயார் செய்யப்படும் மண் அடுப்புகள் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மண் அடுப்புகளை வெளியூரில் இருந்து பெரும்பாலானவர்கள் வாங்கி செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், மண்பானை செய்யும் பணியும் சூடுபிடித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Uthukottai ,Iran ,-Israel war ,Tamil Nadu ,
× RELATED புதுச்சத்திரம் ஊராட்சியில் புதர்மண்டிய கிராம சேவை மையம்