×

புதுச்சத்திரம் ஊராட்சியில் புதர்மண்டிய கிராம சேவை மையம்

திருவள்ளூர், ஏப்.5: புதுச்சத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், இந்த இடம் தற்போது, குடிமகன்களில் கூடாரமாகவும் மாறியுள்ளது. எனவே, கிராம சேவை மையத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பூந்தமல்லி ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. இந்த, கிராம சேவை மையம் கட்டிடமானது முறையான பயன்பாட்டிற்கு வராமல் வீணாகியதால், தற்போது ரூ.25 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சீரமைக்கப்பட்ட கிராம சேவை மையம் இன்று வரை முறையான பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதால், புதர்மண்டி வீணாகி வருவதோடு ‘குடி’ மகன்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுச்சத்திரம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு, கிராம சேவை மையத்தை முறையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Puduchattaram Panchayat ,Puduchattaram Grama Seva Center ,Thiruvallur ,Puduchattaram ,Grama Seva Center ,Poonamalli Union ,Puduchattaram… ,
× RELATED காஸ் தட்டுப்பாடு எதிரொலி மண்...