×

இ-மெயில் மூலமாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர், ஏப்.3: திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. நேற்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக இ-மெயில் மூலமாக தகவல் வந்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், வெடிகுண்டு நிபுணர்களான நாகேஷ், ஆல்பர்ட் ரைட், பிரபாகரன் மற்றும் ஹல்க் மோப்ப நாயுடன் விரைந்து சென்று, நீதிமன்றம் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அந்த வளாகத்தில் ஒன்றும் இல்லாததை தொடர்ந்து புரளி என தெரியவந்தது. ஏற்கெனவே, இதேபோல் இந்த வளாகத்திற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இ-மெயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக யார் எங்கிருந்து அனுப்பியுள்ளார்கள் என்பது குறித்து நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். வெடிகுண்டு புரளி காரணமாக நேற்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

Tags : Integrated Court ,Thiruvallur ,Tiruvallur Integrated Court ,Tiruvallur District Collector’s Office ,Tiruvallur Integrated Court… ,
× RELATED கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி