×

முளைப்பாரி ஊர்வலம்

கூடலூர், ஏப். 3: கூடலூர் வடக்கு காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருக்கோயில் நிர்வாகிகள் ராசா தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

 

Tags : Mulapari procession ,Gudalur ,Gudalur North Kaliamman Temple ,Raja ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்