×

ரூ. 51.30 மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை

துவரங்குறிச்சி, ஏப். 3: துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியில் ரூ. 51. 30 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை புதிதாக அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 1, 2, 6, 9, 10, 11 , 13 ஆகிய வார்டுகளில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

பொன்னம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள், பலமுறை சாலையை சீரமைக்க கோரிக்கைகள் மனுக்களை வழங்கினர். எந்த பயனும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதனைத்தொடர்ந்து திமுக அரசு பதவி ஏற்ற உடன் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதிகளில் உள்ள மண் சாலைகள் சீரமைக்கப்பட்டு சுமார் ரூ. 51. 30 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் மீனாட்சி அம்மன் கோயில் தெரு, பூச்சியாபுரம் வார்டுகளுக்கு வடிகாலுடன் கூடிய பேவர் பிளாக் அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

Tags : Paver block road ,Thuvarangurichi ,Tamil Nadu government ,paver ,Thuvarangurichi Ponnampatti Town Panchayat ,Trichy district ,Thuvarangurichi Ponnampatti Town Panchayat 1 ,
× RELATED 10ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது