×

விபத்தில் காயம் அடைந்த போலீஸ் ஏட்டு பரிதாப சாவு

நெல்லை, ஏப்.3: தச்சநல்லூர் அருகே விபத்தில் காயம் அடைந்த போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். நெல்லை மேலப்பாளையம் கொட்டிக்குளத்தை சேர்ந்தவர் காளிமுத்து(58). இவர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். ரோந்து பிரிவு வாகனத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 18ம் தேதியன்று இரவில் பணி முடிந்த பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தச்சநல்லூர் பைபாஸ் ரவுண்டானாவில் எதிரே வந்த பைக் மீது, இவர் சென்ற பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இவர் இறந்தார்.

Tags : Nellai ,Thachanallur ,Kalimuthu ,Kottikkulam, Melapalayam, Nellai ,
× RELATED போர் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த இந்திய மீனவர்கள் 345 பேர் சென்னை வந்தனர்