- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கரூர் கே. ஸ்டாலின்
- கரூர்
- பாலாஜி மாவட்டம்
- சென்டில்
- கோவா
- பாலாஜி
- செந்தல்
கரூர்: “கலைஞர் முதன்முதலில் வென்ற தொகுதி குளித்தலை. கரூரை பொறுத்தவரை எந்தக் கவலையும் இல்லை, ஏனெனில் இது செந்தில் பாலாஜி மாவட்டம். செந்தில் பாலாஜி புகுந்த வீடுதான் கோவை; அவர் பிறந்த வீடான கரூரை அவர் மறக்க மாட்டார். கரூர், கோவை இரண்டுமே திமுக வசம்தான்” என கரூரில் அரவக்குறிச்சி, குளித்தலை, கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் மேலும் முதல்வர் பேசியதாவது; “கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடி மதிப்பில் பல திட்டங்களை வழங்கி உள்ளோம் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவன்தான் இந்த ஸ்டாலின். சாதிக்க நான் ரெடி? நீங்க ரெடியா?
பாஜகவின் பொய் செய்திகள் எல்லாம் புஷ்வாணம் ஆகி விட்டது. என்னுடன் மக்கள் இருப்பதால், தமிழகத்தில் டப்பா இஞ்சின் வரமுடியாது. ரூ.8 ஆயிரம் கூப்பனில் என்ன வாங்க வேண்டும் என்பது உங்கள் சாய்ஸ்தான். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் கூப்பன் பற்றிய பேச்சாக இருக்கிறது.
ஏராளமான சாதனைகளை செய்தது தி.மு.க. அரசு. வேதனைகளை, சோதனைகளை தந்ததுதான் அ.தி.மு.க. ஆட்சி. துரோகக் கூட்டணிக்கு பாடம் புகட்டும் நாள்தான் ஏப்.23. திமுக குறைந்தபட்ச செயல்திட்டத்துடனேயே கூட்டணி வைத்தது. திமுக கூட்டணி வைத்தபோது பாஜக பிடி கலைஞரிடம் இருந்தது. தற்போது அதிமுக பிடி அமித் ஷாவிடம் உள்ளது. தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து புலம்புகிறார் பழனிசாமி. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் சொல்வது போல, மணிக்கொரு முறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என பேசினார்.
