×

ரஷ்ய நாட்டின் ராணுவ போக்குவரத்து விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலி!

சிம்பெரோபோல்: ரஷ்ய நாட்டின் ராணுவ போக்குவரத்து விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்தனர். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான ஆன்-26 ரக ராணுவ போக்குவரத்து விமானம், நேற்று திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடங்கியது. விமானம் வானில் பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கிரிமியா பகுதியில் உள்ள செங்குத்தான மலைச்சரிவில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 6 ஊழியர்கள் மற்றும் 23 பயணிகள் என மொத்தம் 29 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விமானத்தின் மீது வெளிப்புறத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. ஏவுகணைகளோ, ட்ரோன்களோ அல்லது பறவைகளோ மோதவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய ராணுவ ஆணையம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Simferopol ,Russian Defense Ministry ,
× RELATED திமுக அரசின் திட்டங்களை பற்றி...