காங்கயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம், ஜன. 18: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த வார சந்தைக்கு 50 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 75  ஆயிரம் ரூபாய் வரை விற்றன. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 வரை விற்பனையானது,  காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 35 கால்நடைகள் ரூ.11 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

Related Stories:

>