எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

அவிநாசி, ஜன. 18: எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேவூரில், அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி, அவிநாசி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் சின்னக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி தங்கவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முருகசாமி, ஒன்றிய பாசறை செயலாளர் ரமேஷ், ஒன்றிய தகவல்தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஜெகன், செயலாளர் கார்த்தி, ஒன்றிய மகளிரணி செயலாளர் பேபி, மாவட்ட மீனவரணி துணை தலைவர் சங்கரமூர்த்தி  கலந்து கொண்டனர். இதேபோல் அவிநாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் அதிமுக கொடியேற்றப்பட்டு எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>