×

அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கவுகாத்தி: அசாமின் நதுவார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் சேத்ரியை ​​ஆளும் பாஜவின் ஆதரவு பெற்ற மர்ம நபர்கள் தாக்கினார்கள். நதுவார் தொகுதி நாப்பால்ம் புறவழிச்சாலையில் வேட்பாளரின் வாகன அணிவகுப்பு நடந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாஜவின் மூத்த தலைவர் பத்ம ஹசாரிகாவை எதிர்த்துப் போட்டியிடும் சேத்ரி, தாக்குதலின் போது தரையில் விழுந்து வலியால் துடித்த நிலையில் காணப்பட்டார்; பின்னர் அவர் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களே இத்தாக்குதலை நடத்தியதாக அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் குற்றம்சாட்டினார்.

Tags : Assam ,Gawati ,Congress ,Sunil Kumar Sethri ,Naduvar ,Assembly ,BJP ,Nadapalm ,
× RELATED NCERT நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கியது UGC!