×

கேரளாவில் 2 நாள் ராகுல்காந்தி பிரசாரம்

 

திருவனந்தபுரம்: நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா வருகிறார். தொடர்ந்து 2 நாட்கள் அவர் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜ உள்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்காக தேசிய தலைவர்களும் கேரளாவை முற்றுகையிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த 2 நாளுக்கு முன்பு பாலக்காடு, திருச்சூரில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அமித்ஷா உள்பட ஒன்றிய அமைச்சர்களும் பிரசாரத்திற்காக கேரளா வரவுள்ளனர்.

இந்தநிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பிரசாரத்திற்காக இன்று கேரளா வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொச்சி வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் செல்கிறார். அடூர், பத்தனம்திட்டாவில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி கோட்டயம் செல்கிறார். அதைத்தொடர்ந்து இன்று மாலை கோட்டயத்தில் பிரச்சாரத்தை முடித்த பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சி செல்கிறார். பின்னர் நாளை கண்ணூரில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

 

Tags : RAKULKANDHI ,KERALA ,Thiruvananthapuram ,Parliament ,Rahul Gandhi ,Congress ,
× RELATED மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில்...