×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பெரம்பலூர், பிப்.18: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய் த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படைப் பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்சி, பதிவுறு எழுத்தர் மற்றும் ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

ஜாக்டோ ஜியோ பாதிப்புகளை உடனே சரிசெய்ய வேண் டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்துசெய்து அனைவருக் கும் ஓய்வூதியம் வழங்கப் பட வேண்டும்.குடும்ப பாது காப்புநிதியை ரூ10 லட்சமா க உயர்த்திவழங்கிட வேண் டும். நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி மற்றும் சர ண்டர் விடுப்புகள் உடனே யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் து றைஅலுவலர் சங்கத்தினர் நேற்று (17ம் தேதி)முதல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நா டு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வரு வாய்த்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பதிவறை எழுத்தர் முதல் தாசில்தார் வரையிலான மொத்தமுள்ள 134 பேர்களில் 77 பேர் என 60 சதவீதம் பேர், பணிக்கு வரவில்லை.

இதன் காரணமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகா அலுவலகங்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகம், கலால் பிரிவு அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், புற வழிச்சாலை நிலம் கையக ப்படுத்தும் பிரிவு ஆகிய அனைத்து அலுவலகங்களும் முக்கால் வாசி பணியாளர்கள் வருகை தராததால் வெறிச் சோடிக் காணப்பட்டன. இதனால் வருவாய்த்துறை சார்ந்த அன்றாட பணிகள் முற்றிலும் முடங்கிப் போயின.

Tags : strike ,revenue officials ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து