×

திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் நன்னிலம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு!

 

சென்னை: திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் நன்னிலம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் நன்னிலம் தொகுதிக்கான வேட்பாளரை அக்கட்சியின் தேசிய துணை தலைவர் அறிவித்தார். திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நன்னிலம் தொகுதியில் முகமது முபாரக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை கிருஷ்ணசாமி அறிவித்தார். முதற்கட்டமாக 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் கிருஷ்ணசாமி. சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். புதிய தமிழகம் கட்சி சார்பில் 60 முதல் 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று கூறியுள்ளார்.

நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் போட்டியிடுகிறார். புதிய தமிழகம் கட்சி சார்பில் சங்கரன்கோவிலில் பிரபாகரன், கடையநல்லூரில் கவிதா போட்டியிடுகின்றனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் வாசுதேவநல்லூரில் பால்ராஜ் போட்டியிடுகின்றனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் விளாத்திகுளம் மாடசாமி, நிலக்கோட்டையில் சங்கர் போட்டியிடுகின்றனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

 

Tags : Timuka Alliance ,D. B. ,Chennai ,D. ,Nannilam ,B. I. ,National Vice President ,Akkatsi ,Timuka alliance. ,D. B. I. ,
× RELATED மதிமுக வேட்பாளர் உதய சூரியன்...