சென்னை: ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு தவெக நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய உள்துறை செயலாளராக இருந்த அஜய் பல்லா, 2 ஆண்டுக்கு முன்பே பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஒன்றரை ஆண்டுக்கு முன்பே மணிப்பூர் ஆளுநராக அஜய் பல்லா பதவியேற்றார். ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாற்றப்பட்டது கூட தெரியாமல் தவெக நிர்வாகி நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
