- என்டிஏ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தெலுங்கு தேசம்
- மத்திய அமைச்சர்
- நிலை
- ராம்தாஸ்
- புதுச்சேரி
- விஜய்
- யூனியன்
- அமைச்சர்
- பாஜக
- தேசிய ஜனநாயக கூட்டணி
- விஜய்…
புதுச்சேரி: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜயுடன் பேசி தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜயுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். விஜயுடன் பேசி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஏற்கனவே தவெகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைப்பார் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் B டீம்தான் விஜய் என்பது ஒன்றிய பாஜக அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் ஒப்புதல் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு. தேர்தலுக்குப் பிறகு இந்திய குடியரசு கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர்கள் ஞானமூர்த்திக்கு வாரியத் தலைவர் பதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர். பேட்டியின்போது, இந்திய குடியரசுக் கட்சியின் புதுச்சேரி தலைவர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
