- தேர்தல் பறக்கும் அணியில்
- அம்பத்தூர்
- அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை
- கொரட்டூர் காவல் நிலையம்
- சென்னை
- கோரட்டூர் காவல்துறை
- பறக்கும் அணி
அம்பத்தூர்: சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படையினருக்கு நேற்று நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்று அதிகாலை கொரட்டூர் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் முகப்பேரில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். பின்னர், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் திடீரென வீட்டுக்கு புகுந்து சினிமா பாணியில் சோதனை நடத்தினர். அப்போது, 1 கோடியே 28 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது, மஞ்சுநாதன் என்பவர் பணத்தை பதுக்கி வைத்திருந்ததும் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அம்பத்தூர் மண்டல அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டு இருந்ததா? இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்தியது.
