×

நெருக்கடி தேவையற்றது: சீமான் பேட்டி

ஆவடி: தவெகவுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி தேவையற்றது என ஆவடியில் நடந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். ஆவடி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை ஆவடியில் நேற்று நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதையடுத்து அவர், நிருபர்களிடம் கூறுகையில், தவெகவுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி தேவையற்றது. தேர்தல் ஆணையம் எல்லோருக்கும் சம உரிமையை கொடுக்கவேண்டும். ஆனால் அந்த நெருக்கடியை தேர்தல் ஆணையம் ஏன் கொடுக்கிறது என எனக்கு தெரியவில்லை. நான் ஆட்சிக்கு வந்துவிட்டால், அகில உலகிற்கும் தமிழ்நாட்டில் இருந்து பால் செல்லும்” என்றார்.

Tags : Seaman ,Avadi ,Tamil Nadu ,Taweewadi ,NAMILAR PARTY ,
× RELATED கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் அண்ணாமலை புறக்கணிப்பு