×

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை நாளை மறுதினம் (மார்ச் 31) திருவாரூரில் தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை நாளை மறுதினம் (மார்ச் 31) திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஊரான திருவாரூரில் பரப்புரையை தொடங்குகிறார்.

Tags : Chief Minister ,Thiruvaroor ,K. Stalin ,Chennai ,MLA ,Trichy ,Karur ,Erode ,Goa ,
× RELATED இது வேட்பாளர் அறிமுக கூட்டம் அல்ல;...