×

சீன விசா மோசடி: கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

 

புதுடெல்லி: கடந்த 2011ம் ஆண்டில் 263 சீன பணியாளர்களுக்கு விசா பெற்று தந்ததில் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. சிபிஐ வழக்கில் தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரை, அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இது நிலுவையில் இருந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Tags : Karti Chidambaram ,New Delhi ,CBI ,Enforcement Directorate ,
× RELATED திருமணமானவருடன் விவாகரத்து பெறாமல்...