டெல்லி: நாட்டிலுள்ள அனைத்து பங்க்-களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. தட்டுப்பாடு இருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சுமார் 94,000 மெட்ரிக் டன் சரக்குடன் 2 LPG கியாஸ் கப்பல்கள், இந்தியாவை நோக்கிப் பாதுகாப்பாக வந்துகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
