×

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 2 தொகுதி வேட்பாளர் பட்டியல்: தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிவிப்பு

 

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேற்று நேர்காணல் நடந்தது.

இறுதியில் இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாபநாசம் தொகுதியில் மாநிலச் செயலாளர் ஏ.எம். ஷாஜஹான், வாணியம்பாடி தொகுதியில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக அரியணை ஏற்றி தமிழ்நாட்டில் நல்லரசு அமைய முழுமையாக செயல்பட்டு சாதிப்போம்.

Tags : Indian Union Muslim League ,National President ,Kader Mohideen ,Chennai ,DMK ,Secular Progressive Alliance ,President… ,
× RELATED வேட்புமனு தாக்கல் செய்யும் போது,...