×

என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்: விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க்!

டெல்லி: ஆஸ்திரேலிய கோடைக்காலத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “இந்திய ஊடகங்களில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு இருக்கும் மேடைகளைப் பயன்படுத்தி சில கடுமையான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலிய தொடரின் போது எனது தோள் மற்றும் முழங்கைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தீவிரம் எனக்குத் தெரியாது. தற்போது அதற்கான சிகிச்சையில் நான் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், ஒரு சில நபர்கள் ஐபிஎல் பங்கேற்பு குறித்து தவறான தகவல்களை உண்மை போலப் பரப்பி வருகின்றனர். என்னைப் பற்றி எனக்குத் தெரியும், எனது உடலைப் பற்றி அவர்களை விட நான் நன்கு அறிவேன்.”

இந்தக் காயம் டெல்லி அணிக்கு ஒரு இடையூறாக அமைந்திருப்பதை நான் உணர்கிறேன். இதற்காக டெல்லி அணி நிர்வாகத்திடமும், ஆரம்பப் போட்டிகளில் என்னால் விளையாட முடியாததற்காக ரசிகர்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இன்னும் டெல்லி அணியுடன் இணைய உறுதியாக இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அணி நிர்வாகத்திற்குத் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Mitchell Starc ,Delhi Capitals ,Delhi ,IPL ,Australian ,summer ,
× RELATED வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை...