×

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை

அரூர், பிப்.18: அரூரைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் (ஓய்வு) சண்முகம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. தற்போது, கிணறுகளில் தண்ணீர் இருப்பதால், விவசாயிகள் பலர் நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நெல்லுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. 100 கிலோ எடையுள்ள நெல் மூட்டைகளை, வியாபாரிகள் ₹1000 முதல் ₹1200 வரை வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அரசு சார்பில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டை ஒன்றுக்கு ₹1950க்கும் கூடுதலாக விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, தமிழக அரசு அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : paddy procurement center ,
× RELATED கோபி கூகலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு